மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கருப்பன் திரைப்பட காளை பிரச்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்

கருப்பன் திரைப்படத்தில் கொம்பன் காளை தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் உரிமையாளர் திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் திருச்சி மாவட்டச்

News image
Updated On :17 ஜூலை 2017, 5:09 am

கருப்பன் திரைப்படத்தில் கொம்பன் காளை தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் உரிமையாளர் திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் எம். காத்தான், படத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், இயக்குநர் ஏ. பன்னீர்செல்வம், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் கொம்பன் என்ற ஜல்லிக்கட்டுக் காளையை நடிகர் விஜய் சேதுபதி அடக்குவது போன்ற டிரைலர் யூடியூப், வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதைக் கண்டு கொம்பன் காளையின் ஜல்லிக்கட்டு வீரர்கள், ரசிகர்கள் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளரும், காளையின் உரிமையாளருமான காத்தானிடம் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், படத்தில் வரும் காளை தன்னுடைய கொம்பன் காளைதான் என்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கொம்பன் காளையை அடக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.