டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அந்நியன் படத்தில் நடித்த சதாவா இது? 'டார்ச் லைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கான்ஃபிடன்ட் ஃபிலிம் கேஃப் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கே.ட்ரீம் வேர்ல்டு - ஒயிட்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

உமாகல்யாணி

கான்ஃபிடன்ட் ஃபிலிம் கேஃப் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கே.ட்ரீம் வேர்ல்டு - ஒயிட் ஸ்க்ரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம்  'டார்ச் லைட்'. விஜய் நடித்த 'தமிழன்' படத்தை இயக்கிய அப்துல் மஜித் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். 

Story image

படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் 31 வயதான சதா. அஞ்சலி, ரித்விகா, உதயா, சுஜாதா, ரங்கநாதன், இயக்குநர் வெங்கடேஷ், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் அப்துல் மஜித் கூறுகையில், ‘வறுமையால் தடம் மாறிச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவை பொறுத்தவரை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்களின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் செயல் நல்லதல்ல. 

Story image

பாலியல் தொந்தரவுக்கு உள்ளான ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தின் தழுவலே இப்படம். 90-களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.  படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கிய நிலையில், நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி, பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் படத்தின் நோக்கம்’ என்றார் அப்துல் மஜித்.

தனது டிவிட்டர் பக்கத்தில் அப்துல் மஜித்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் வெளியிட்டார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.