பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2 படம் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் ரூ. 400 கோடி கூட வசூலித்தது கிடையாது. இந்நிலையில் ஹிந்தி பாகுபலி 2-வின் வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டி மகத்தான சாதனை புரிந்துள்ளது. ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியது.
இந்தியா முழுக்க தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் 1050 திரையரங்குகளில் தனது 50-வது நாளைக் கடந்து சாதனை செய்தது. இந்நிலையில் இந்தப் படம் இன்று தனது 100-வது நாளைக் கொண்டாடுகிறது. நாடு முழுக்க இன்னமும் பல திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான பாகுபலி 2, ரூ. 19 கோடி வசூலித்தது. இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2 படம் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் ரூ. 400 கோடி கூட வசூலித்தது கிடையாது. இந்நிலையில் ஹிந்தி பாகுபலி 2-வின் வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டி மகத்தான சாதனை புரிந்துள்ளது.
பாகுபலி 2 (ஹிந்தி) இந்தியாவில் நிகழ்த்திய சாதனைகள்
ரூ. 100 கோடி: 3-வது நாள்
ரூ. 200 கோடி: 6-வது நாள்
ரூ. 300 கோடி: 10-வது நாள்
ரூ. 400 கோடி: 15-வது நாள்
ரூ. 450 கோடி: 20-வது நாள்
ரூ. 475 கோடி: 24-வது நாள்
ரூ. 500 கோடி: 34-வது நாள்
பாலிவுட்டில் சாதனை நிகழ்த்திய படங்கள்
முதல் ரூ. 100 கோடி படம்: கஜினி (2008)
ரூ. 200 கோடி: 3 இடியட்ஸ் (2009)
ரூ. 300 கோடி: பிகே (2014)
ரூ. 400 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)
ரூ. 500 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


