நடிகர் சூரிக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெண்ணிலாக் கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான சூரி, நகைச்சுவை நடிகராக இருந்து, வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்துக்குப் பின்னர் பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார்.
இவரின் நடிப்பில் மாமன், கருடன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் வெளியாகி வெற்றி பெற்றன.
செல்ஃபி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் 'மண்டாடி' என்ற படத்தில் தற்போது சூரி நடித்து வருகிறார். இது கடலில் நடக்கும் படகுப் போட்டியை மையப்படுத்தி உருவாகும் படம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் பல மொழிகளில் பிரமாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களைத் தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது 3-வது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு சென்னை செம்பரம்பாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து வைத்து உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
மலையாள திரைப்படவுலகில் பிரேமலு திரைப்படத்துக்குப் பின்னர் பெரிதும் புகழ்பெற்ற மமிதா பைஜூ, சூரிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மலையாளத்தில் கலக்கி, தமிழில் டியூட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மமிதா பைஜூ, திரைக்கு வராத விஜய்யின் ஜனநாயகன், சூரியாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், தனுஷின் கர, இரண்டு வானம் உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இதுவரை பெயரிடப்படாமல் சூரி 7 எனப் பெயரிடப்பட்டுள்ள தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகள் இந்தப் படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Actor Mamitha Baiju is reportedly in discussions to play the female lead in actor Soori’s upcoming project directed by filmmaker Ravikumar. While the casting has generated considerable buzz, an official confirmation from the makers is still awaited.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?
தனுஷ் நடிப்புப் பல்கலைக்கழகம்: மமிதா பைஜூ

2015 சென்னை வெள்ளத்தைப் படமாக்கும் ரவிக்குமார்?

5 திரைப்படங்களின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் மமிதா பைஜூ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


