ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்த இளம் நடிகைக்கு விரைவில் திருமணமாகப் போகிறது: உரையாடலில் போட்டுடைத்த தீபிகா படுகோன்

பாலிவுட்டின் இளம் நடிகை ஒருவருக்கு விரைவில் திருமணமாகப் போகிறது என்ற ரகசியத்தை பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை  தீபிகா படுகோன் எதேச்சையாகத் தெரிவித்தார்.

News image

தீபிகா படுகோன்

Updated On :26 நவம்பர் 2019, 11:51 am

மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை ஒருவருக்கு விரைவில் திருமணமாகப் போகிறது என்ற ரகசியத்தை பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை  தீபிகா படுகோன் எதேச்சையாகத் தெரிவித்தார்.

பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், அலியா பட்,  நடிகர் ஆயுஷ்மான் குரானா மற்றும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட சில நடிகர்கள் சினிமா பத்திரிகை ஒன்று சமீபத்தில் நடத்திய திரைப்படங்கள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கு பெற்றனர்.

அப்போது தொகுப்பாளர், நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் இந்திய சினிமா தொடர்பாக இங்குள்ள நடிகர்களில்  நீங்கள் யாரிடம் இருந்து அறிவுரைகளை பெற விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்துப் பேசிய தேவரகொண்டா, 'வெட்கத்தை விட்டுச் சொல்வதானால், இங்குஅமர்ந்திருக்கும் கலைஞர்கள் மீது எத்தனையோ பேருக்கு காதல் இருக்கும், நானும் இங்கிருக்கும் தீபிகா மற்றும் அலியா ஆகியோரைக் காதலிக்கிறேன்.  ஆனால் தீபிகாவுக்கு திருமணம் ஆகி விட்டது என்று கூறினார்.

உடனே இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய தீபிகா படுகோன், 'அலியாவிற்கும் விரைவில் திருமணமாகப் போகிறது' என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியான அலியா, தீபிகாவிடம், 'அதை ஏன் இப்போது இங்கே சொல்கிறீர்கள்?' என்று தெரிவித்தார்.

Story image

இதனால் சுதாரித்துக் கொண்ட தீபிகா தான் சாதாரணமாக சொன்னதாகக் கூறி, சிரித்துச் சமாளித்து விட்டார்.

இருந்த போதிலும் அலியா பட்டிற்கும் அவரது காதலரும் பாலிவுட் நடிகருமான ரண்பிர் கபூருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக இந்த ஆண்டு துவக்கத்தில் தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.