ஆண்டவர் படம் யூ-டியூப் சேனலில் பார்க்க கிடைத்தது. இன்ஜீனியர் படிப்பை முடித்துவிட்டு மீம்ஸ் கிரியேட்டராக வாழ்க்கையை நகர்த்தும் இளைஞரை சுற்றி நகரும் கதை. அந்த இளைஞருக்கு வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் காதலி. ஒலியை மட்டும் உள்வாங்கி தகவல்களை அள்ளித்தரும் கருவியை உருவாக்கிவரும் நண்பர் என்று மிகக் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு மிக அழகாக ஒரு படத்தை உருவாக்கி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குநர் கெளசிக் ரங்கநாதன்.
சுமார் 34 நிமிடங்கள் கொண்ட இந்தக் குறும்படத்தின் கதை என்ன? இன்ஜீனியரிங் படித்துவிட்டு கிரியேட்டிவ் துறையில் வேலைதேடும் இளைஞருக்கு, அவரது நண்பர் தயாரிக்கும் அந்தக் கருவியின் அருமை புரிகிறது.
அந்தக் கருவியின் பெயர் தான் ஆண்டவர். படம் தொடங்கும்போதே பல கேள்விகளுக்கு அந்தக் கருவி பதிலளிப்பது போன்ற காட்சிகள் வருவதால் பார்வையாளர்களுக்கு கதை குறித்த ஓர் அறிமுகம் கிடைத்து விடுகிறது. படத்துடன் ஒன்றிப்போகவும் ஒரு வாய்ப்பாகிவிடுகிறது.
"வேலைக்கு போனா நீ என்ன வச்சு பாத்துப்பனு அப்பா கிட்ட சொல்றன். இல்லைனா நான் வேலைக்கு போய் உன்ன பாத்தப்பனு சொல்றன்" என்பது போன்ற பல வசனங்களால் கவனம் ஈர்க்கிறார் கெளசிக்.
ஒலியை மட்டும் உள்வாங்கி பதிலளிக்கும் அந்தக் கருவி தொடர்பான காட்சிகளை எடுப்பதில் இயக்குநர் அதிக மெனக்கிட்டிருக்கிறார். அமானுஷ்ய சக்தி கடந்து செல்லும் காட்சி இயக்குநர் டச்.
ஒவ்வொரு கோணமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் இயக்குநரின் கண்களாக செயல்பட்டிருக்கிறார். விஷாந்த் சுரேஷின் இசை, ராம் பாண்டியனின் படத்தொகுப்பு என அனைவரின் உழைப்பும் படத்தில் காண முடிகிறது.
ஒலிப்பதிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்து அதை சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஒலிப்பதிவாளர்.
கருவியை வைத்து நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்று சிந்திக்கிறார் . ஆனால், அந்தக் கருவியைக் கொண்டு அவரால் வேலை பெற முடிகிறதா, இல்லையா என்பது கதை.
ஒரு பத்திரிகை அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் காட்சி மிக அருமை.
காதலியாக மேயாத மான், மெர்க்குரியில் நடித்த இந்துஜா நடித்துள்ளார் (ஆண்டவர் படம் அவர் பெரிய திரைக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்டது).
கதையின் நாயகனாக கண்ணா ரவியும், அவரது நண்பராக மதன் ராஜ் பாஸ்கரனும் சிறப்பாக நடித்துள்ளனர்.
வழக்கமாக காதல், காமெடி என்று வரும் குறும்படங்களுக்கு மத்தியில் இதுவொரு வித்தியாசமான கதையைக் கொண்டு வந்திருப்பதால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது.
இயக்குநர் கெளசிக்கிடம் பேசினேன். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கெளசிக் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்தவர். ஆண்டவருக்கு முன் சில குறும்படங்களை எடுத்திருக்கிறார். குறும்பட விழாக்களுக்கு அனுப்பி விருதுகளை இவருடைய படங்கள் வென்றிருக்கின்றன. ஒரு கிடாயின் கருணை மனுவில் உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவம் கொண்ட கெளசிக் தற்போது வெள்ளித்திரையில் தடம் பதிக்க உள்ளார்.
10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களால் பார்த்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஆண்டவர் படத்தின் குழுவினர் இன்னும் சிறப்பான பல படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

வரி விதிப்பு விவகாரம்: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல்

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

