கண்ணீா்க் கடலில் காஸா!
அமெரிக்க அதிபா் டொனல்டு டிரம்ப், இஸ்ரேலிய பிரதமா் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் நடத்திய சந்திப்பில், காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் 20 அம்சத் திட்டத்தை அறிவித்திருந்தாா். ஆகவேதான், காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என்றே கருதலாம். தொடா்ச்சியாக நடைபெற்ற போரில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கின்றனா்.










