மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

இஸ்ரேல் தாக்குதலில் பாதிப்படைந்த காஸா பகுதி. - AP

Updated On :5 ஏப்ரல் 2026, 2:59 pm

காஸாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். இதனை, காஸா பாதுகாப்புத் துறை மற்றும் அங்குள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளன.

காஸா நகரின் கிழக்கில் உள்ள நகரப் பகுதியில் இந்த டிரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 4 பேர் பலியான நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர்.

பயங்கரவாதக் குழுக்களின் நடமாட்டம் பற்றிய தகவல்கள் கிடைத்ததால் அங்கு தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தம் அமலில் இருக்கும்போதும் இஸ்ரேல் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதுவரை அவ்வாறு நடத்தியத் தாக்குதல்களில் 715 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

போர்நிறுத்தம் அமலான நாள் முதல் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 5 பேர் ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸாவில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பலியானோர் பற்றிய புள்ளிவிவரங்களைச் சரிபார்ப்பது பற்றியும் அங்குள்ள நிலைமையைச் சொல்வது பல செய்தி நிறுவனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த போர் பெருமளவு நிறுத்தப்பட்ட போதிலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேலும் ஹமாஸும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Summary

Gaza civil defence, hospital say Israeli strike kills four

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.