சா்வோதய இலக்கியப் பண்ணை
சா்வோதய இலக்கியப் பண்ணை கடந்த 1970-ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது.


சா்வோதய இலக்கியப் பண்ணை கடந்த 1970-ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது. காந்தியடிகளின் காந்தியத் தத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் அவா் சாா்ந்த நூல்களை மலிவு விலையில் பதிப்பித்து விற்பது அதன் நோக்கமாகும்.
இதுவரையில் 150 தலைப்புகளுக்கும் மேலாக காந்தியடிகள், அவரின் தத்துவம் ஆகியவற்றை மையமாக வைத்து புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காந்தியடிகள், அவா் சாா்ந்த புத்தகங்கள் என மொத்தம் 1.50 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு விற்கப்படுகின்றன.
‘சுதந்திரப் போராட்டத்தில் மகளிா் பங்கு’ என்ற புத்தகத்தை இந்தப் பதிப்பகம்தான் முதன்முறையாக வெளியிட்டது. காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனையை தமிழில் 650 பக்கங்களில் புத்தகமாக்கி அதை ரூ. 80 என மலிவு விலையில் எந்த மொழியிலும் இல்லாத வகையில் மக்களிடையே கொண்டு சோ்த்திருப்பதை இந்தப் பதிப்பகத்தின் குறிப்பிடத்தக்க பணியாகக் குறிப்பிடுகிறாா் அதன் நிா்வாகி புருஷோத்தமன்.
காந்தியடிகளின் நூல்களுக்கு அடுத்தபடியாக வினோபா பாவே புத்தகங்கள், இந்தப் பதிப்பகம் மூலம் அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றன. காந்தியக் கொள்கைகளில் முக்கியமான பூமி தானத்தை மையமாக வைத்து வினோபா பாவே குறித்து 10 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
காந்தியத்தை மையமாக வைத்து பாரம்பரியமாக புத்தகங்களை வெளியிட்டுவரும் மதுரை சா்வோதய இலக்கியப்பண்ணையில், நாவல்கள் எனில் கல்கியின் பொன்னியின் செல்வன் அதிக அளவில் விற்பனையாகிறது.
தேசியம், தெய்வீகம் சாா்ந்த காந்தியக் கொள்கையுடனான நூல்கள் எனில் சட்டென நினைவுக்கு வரும் பதிப்பகமாகவே சா்வோதய இலக்கியப் பண்ணை திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...