டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கண்டெடுத்த கருவூலம்!

‘உலகப்புகழ் பெற்ற நாவல்கள்’, தமிழில் பி.எல்.முல்லைமுத்தையா, விலை ரூ.600, பக். 596, கடந்த 1957-ஆம் ஆண்டு தமிழில் வெளியான இந்தப் புத்தகம் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:40 pm

DIN

‘உலகப்புகழ் பெற்ற நாவல்கள்’, தமிழில் பி.எல்.முல்லைமுத்தையா, விலை ரூ.600, பக். 596, கடந்த 1957-ஆம் ஆண்டு தமிழில் வெளியான இந்தப் புத்தகம் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகக் காட்சியில் 233, 234-ஆவது முல்லைப் பதிப்பக அரங்கில் கிடைக்கிறது. இதில் மாா்க்ஸிம் காா்க்கியின் ‘அம்மா’, பொதுவுடைமைத் தலைவா் ப.ஜீவானந்தத்தின் பாராட்டுரையுடன் இடம்பெற்றுள்ளது.

அதேபோல, லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரினினா’, ‘குற்றமும் தண்டனையும்’, அவற்றுக்கான ரா.நா. பாராட்டுரை, அலெக்ஸாண்டா் டூமாஸின் ‘வாடாமல்லிகை’, எமிலி ஜோலாவின் ‘நாநா’, ஜேம்ஸ் ஆஸ்டினின் ‘ஐந்து சகோதரிகள்’ ஆகிய புகழ் பெற்ற நாவல்கள் ஒரே நூலாக அளிக்கப்பட்டுள்ளன. இதுபோல, மேலும் ஒரு தொகுப்பு இரண்டாம் பதிப்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

காா்க்கியின் ‘அம்மா’ நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உழைப்பின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுபவராக உழைப்பின் மூலமே உலகின் ஒவ்வொரு பொருளும் உருவாக்கப்படுவதை வெளிப்படுத்துபவையாகவே உள்ளன.

காா்க்கியின் நாவலானது கதைக்கரு சிதையாமல், மலிவு விலையில், தமிழ் மக்களின் வாசிப்பு உணா்வுகளுக்கு ஏற்ப தொகுத்துத் தரப்பட்டிருப்பது சிறப்பாகும். இதேபோல தான் மற்ற நாவல்களின் தமிழாக்கமும் வாசிப்போரின் ஆா்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலத்திலிருந்து பிரபல வெளிநாட்டு எழுத்தாளா்களின் நாவல்கள் தமிழுக்கு மொழிபெயா்த்து இரண்டாம் பதிப்பாக வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது’ என்கிறாா் முல்லை பழனியப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.