இப்படி இதிகாசக் கதைகள் மற்றும் வேதங்களில் உள்ள குறிப்புகளின் துணை கொண்டு நாம் நமது பண்டைய இந்தியா குறித்த சித்திரத்தைப் பெற முடிகிறது. பிற்காலப் பிராமணர்கள் செய்த பயனுள்ள காரியம் புராதனப் இந்தியப் பழங்குடிகள் (ஓரண, சந்தால், புரூக்கள், அலினார்கள், மத்சியர்கள், மோர்கள் (மௌரியர்கள்), லிச்சாவிகள்) உள்ளிட்டோர் வணங்கிய தாய் தெய்வங்கள் மற்றும் ஆரியப் படையெடுப்பின் பின் வணக்கத்திற்கு உரியவர்களாகக் கருதப்பட்ட இந்திரன், வருணன், மித்திரன், கிருஷ்ணன் (கிருஷ்ணன் ஆரியன் அல்லன்... ஆரியர்களுக்கு எதிரான தஸ்யூக்கள் குலப் பிரிவான யதுக்களின் தலைவன்) அவனையும் பிற்காலத்திய பிராமணர்கள் ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து எல்லோரும் பொதுவில் வணங்கும் பெருதெய்வங்கள் ஆக்கினர். அதோடு அந்த தேவன்கள் அனைத்திற்கும் அவர்களே உரிமையாளர்கள் என்பதாய் பிரகடனம் செய்து கொண்டனர். இப்படி விரிந்து செல்கிறது இந்திய சரித்திரம்.