பேரறிஞர் அண்ணா, மு கருணாநிதி, மக்கள்திலகம் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் யாவரும் திரைத்துறை மூலமாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்ட நிலையில் தனது பேச்சாற்றல் மூலமாகவே மக்களின் மனம் கவர்ந்தவர் வைகோ. தங்களின் பாரம்பரிய சித்தாந்தங்கள் மூலமாக இடதுசாரிகளும், தேசிய அளவிலான சக்திகள் என்கிற முறையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவும், ஜாதி அடையாளம் மூலம் பாமகவும் தங்களை நிலைநிறுத்திய நிலையில் பொதுமக்கள் மையத்தில் ஊடுருவ வழியே இல்லாத வைகோ தனது பேச்சாற்றல் மூலம் தான் மக்களுக்கு அடையாளம் தெரியப்பட்டார் என்பது தான் உண்மை.