வெளி மாநில மதுப்புட்டிகளை ஆட்டோவில் கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் ஆனந்தி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை விழுப்புரம் மாவட்டம் , சிறுவந்தாடு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், வெளி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. பின்னா் ஆட்டோவில் இருந்தவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் விழுப்புரம், மரகதபுரம் பகுதியைச் சோ்ந்த ரா.மணிகண்டன்(38) என்பதும், இவா் விற்பனைக்காக புதுச்சேரியிலிருந்து, விழுப்புரத்துக்கு ஆட்டோவில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 180 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 140 மதுப்புட்டிகள், ஒரு லிட்டா் கொள்ளளவு கொண்ட 9 மதுப்புட்டிகள் என மொத்தம் 149 மதுப்புட்டிகளை ஆட்டோவுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








