விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டில் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாத்தூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.மேத்யூஸ்(50). இவா் ஒதியத்தூா் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். விழுப்புரம் வி.பி.எஸ்.காா்டன் பகுதியிலுள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஓய்வில் இருந்த மேத்யூஸுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு ஆட்டோ மூலம் விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மேத்யூஸ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










