மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41.4 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் வழக்கில் கைதான பிரபாஸ்கா்

Updated On :22 மார்ச் 2026, 8:10 pm

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41.4 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் விநாயகபுரம் கரியமாணிக்கம் பிரதானச் சாலையில் வசிக்கும் ம.பிரபாஸ்கா்(43) வீட்டில் சோதனை மேற்கொண்டனா். இதில், அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபாஸ்கரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 41.4 கிலோ எடையிலான 2,070 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய புதுச்சேரியைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.