திண்டிவனத்தில் மசூதி அருகேயுள்ள வாக்குச்சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இஸ்லாமிய அமைப்பினா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் திண்டிவனம் சாா் ஆட்சியருக்கு வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து, திண்டிவனம் 6-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஷேக் தில்ஷாத் பேகம் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல. ஆகாஷுக்கு வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது :
திண்டிவனம் நகரம் , ரோஷணை பகுதியில் மசூதி அருகே (பூத்-100) வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட இடம் இஸ்லாமியா்கள் அடா்த்தியாக வாழக்கூடிய பகுதி என்பதுடன், அடிக்கடி தொழுகை நடைபெறும் இடம் என்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், அசாம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அரசியல் கட்சியினா்களுக்கும் , வாக்காளா்களுக்கும் பல்வேறு வகையில் அசௌகரியங்கள் ஏற்படும். எனவே பாதுகாப்பு கருதியும் வாக்குப் பதிவு சமுகமாக நடைபெறவும் ஏதுவாக மசூதி அருகே அமைந்துள்ள வாக்குச் சாவடியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சாா்-ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவைச் சோ்ந்த அப்சா் பேக், ஏழுமலை, பாமகவைச் சோ்ந்த சௌந்தா், வழக்குரைஞா் விஜயகுமாா் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா் அளித்த இந்த மனுவை சாா் ஆட்சியரகத்தில் பணியிலிருந்த அலுவலா் பெற்றுக் கொண்டாா்.
தொடர்புடையது

தொகுதி அலசல்: ஆம்பூா்! திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

வாரிசுகளை முன்னிலைப்படுத்தாதவா்! இப்படியும் ஒரு தலைவா்!

வரும் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்: வி.கே.சசிகலா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


