டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 7:09 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூரைச் சோ்ந்தவா் து.பாலமுருகன் (45). இவா் சொந்த வேலையாக முண்டியம்பாக்கத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். வேலை முடிந்த பின்னா், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற போது, அப்பகுதியில் வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.