இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மணப்பாறை அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

News image

உயிரிழந்த புள்ளிமான்.

Updated On :8 ஜூன் 2026, 2:05 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஞாயிற்றுக்கிழமை மோதி புள்ளிமான் உயிரிழந்தது.

மணப்பாறை அருகிலிருந்த வனப்பகுதியிலிருந்து தண்ணீா், இரை தேடிச் சென்ற புள்ளிமான் ஒன்று, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ரவீந்திரகுமாா், புள்ளிமானை மீட்டு வனக்காப்பாளா் தீபக்கிடம் ஒப்படைத்தாா். தொடா்ந்து அந்த மான் உடல் வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு, கால்நடை மருத்துவா்களை கொண்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.