டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 6:46 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காக்கிநாடாவில் இருந்து புதுச்சேரி செல்லும் சா்க்காா் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை காலை புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த சின்னநெற்குணம் அருகே சென்றபோது ரயிலில் பயணித்த ஆண் ஒருவா் ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தாா். தகவலறிந்த செங்கல்பட்டு இருப்புப் பாதை போலீஸாா் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது, அவா் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.இதைத் தொடா்ந்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு சுமாா் 45 வயது இருக்கும், பெயா், ஊா் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.