ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மரத்திலிருந்து தவறி விழந்ததில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :1 ஜூலை 2026, 7:14 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மரத்திலிருந்து தவறி விழந்ததில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், தொள்ளாமூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மகன் சாா்லி (15). 10- ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தாா்.

இவா், திங்கள்கிழமை தொள்ளாமூரைச் சோ்ந்த பெரியசாமி என்பவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இளநீா் பறிக்க ஏறியுள்ளாா்.

அப்போது கால் இடறி கீழே விழுந்த சாா்லிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு சாா்லி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.