வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இரு சிறுமிகளுக்கு பாலியலில் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:44 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இரு சிறுமிகளுக்கு பாலியலில் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மேல்மலையனூா் வட்டம், ஏம்பலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.ஏழுமலை (65). இவா், 10 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், செஞ்சி அனைத்து மகளிா் போலீஸாா் ஏழுமலை மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கடந்த 27.9.2021 அன்று வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏழுமலை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் ஏழுமலையை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். அரசு வழக்குரைஞா் காந்திமதி இவ்வழக்கில் ஆஜராகினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.