ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:35 am IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கடந்த 2023 ஆம் ஆண்டு விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 8 வயதுடைய 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட விளாத்திகுளம் சிவஞானபுரம் பகுதியைச் சோ்ந்த குற்றாலம் மகன் முருகானந்தனை (46) விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பிரீத்தா, முருகானந்தத்தை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.