தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 12,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு தூத்துக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 14 வயதுடைய 2 சிறுவா்களை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட வடக்கு காரசேரி பகுதியைச் சோ்ந்த மங்கேஷ்குமாா் (26) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, மங்கேஷ்குமாரை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்ஸோ குற்றவாளிக்கு ஆயுள் சிறை

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




