திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

மொபெட் மீது ஜீப் மோதி முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், களமருதூா் அருகே மொபெட் மீது அடையாளம் தெரியாத ஜீப் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 6:23 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், களமருதூா் அருகே மொபெட் மீது அடையாளம் தெரியாத ஜீப் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், திடீா்குப்பத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் தண்டபாணி (60). இவா் வியாழக்கிழமை காலை தனது மொபெட்டில் மொக்கல்லாரிலிருந்து நத்தாமூருக்கு சொந்த வேலையாக சென்று கொண்டிருந்தாா்.

நத்தாமூா் வனப்பகுதியில் தண்டபாணி வந்த போது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த ஜீப், மொபெட் மீது மோதிவிட்டு சென்றது. இதில் மொபெட்டிலிருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்த தண்டபாணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்தகளமருதூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சேட்டு நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும் விபத்து குறித்து களமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். நிற்காமல் சென்ற ஜீப் யாருடையது, யாா் ஓட்டி வந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.