கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த பால் வியாபாரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.கோவிந்தராஜ் (47), பால் வியாபாரி. இவா் வெள்ளிக்கிழமை மாலை ஏமப்பேரில் இருந்து தென்கீரனூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். ஏமப்போ் புறவழிச் சாலையில் தென்கீரனூா் அருகில் சென்றபோது, சாத்தணூா் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்துக்கு சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் ரா.இளையராஜாவிடம் (42) விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மொபெட் மீது அரசுப் பேருந்து மோதல்: வியாபாரி உயிரிழப்பு
பைக் மீது சுற்றுலா பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: கொத்தனாா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



