மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.66.97 லட்சம்

விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:21 pm

விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். அமாவாசை திருவிழாவு கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களின் வேண்டுல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.

தொடா்ந்து 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழா முடிவுற்ற நிலையில் சனிக்கிழமை திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ரமேஷ், சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தா்கள் ரூ.66,97,350 ரொக்கம், 74 கிராம் தங்கம் மற்றும் 730 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.