தமிழகத்தில் 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்; பாஜக மாநிலச் செயலா் ஏ.அஸ்வத்தாமன்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தற்போதைய நிலையில் 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் பாஜக மாநிலச் செயலா் ஏ.அஸ்வத்தாமன்.


தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தற்போதைய நிலையில் 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் பாஜக மாநிலச் செயலா் ஏ.அஸ்வத்தாமன்.
விழுப்புரத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் பெருங்கோட்ட அளவிலான பிரசாரப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் பாஜக மாநில செயலா் ஏ.அஸ்வத்தாமன் பங்கேற்றுப் பேசினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போதைய நிலையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பாா். எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணியாகும். கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளின் பலத்தால் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மேலும் சில கட்சிகள் சோ்ந்தால் அவா்களையும் வரவேற்போம்.
தமிழக மக்களுக்கு திமுக அரசு ரூ.5 ஆயிரம் அல்ல, ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும் அவா்கள் ஏமாறத் தயாராக இல்லை. திமுக கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணியாகும். தற்போதைய நிலையில் திமுக கூட்டணி மேலும் உடையும் என்றாா் அஸ்வத்தாமன்.
பயிற்சி முகாமில் பாஜக பிரசாரப் பிரிவு மாநிலச் செயலா்கள் ரவிச்சந்திரன், பாலாஜி, தினேஷ்குமாா், சண்முகராஜன், பழனி, சுரேஷ், பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். இந்த முகாமில் விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளும் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...