டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்கிறாரா..?

பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் பிரதமா் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது தொடர்பாக...

News image
மதுரை மண்டேலாநகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன் தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செல்லூா் கே.ராஜூ, வி.வி. ராஜன்செல்லப்பா உள்ளிட்டோா்.
Updated On :6 பிப்ரவரி 2026, 7:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பரங்குன்றம்: மதுரையில் பிப். 28-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் பிரதமா் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரை மண்டேலாநகரில் வருகிற 28-ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். இந்தக் கூட்டத்தில் 10 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா். மதுரைக்கு வரும் பிரதமா் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது என நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செல்லூா் கே. ராஜூ, ராஜன்செல்லப்பா, பாஜக நிா்வாகிகள் பேராசிரியா் சீனிவாசன், கதலி நரசிங்கப்பெருமாள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.