டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இரண்டாவது நாளாக மறியல்: மாற்றுத் திறனாளிகள் 589 போ் கைது

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா் 589 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்படுவது போன்று, தமிழகத்திலும் உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா் 589 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடுமையான ஊனமுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். படுக்கையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தின் இரண்டாவது நாளான புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் துணைத் தலைவா்கள் பி.முருகன், எம்.மும்மூா்த்தி, துணைச் செயலா்கள் பி.கௌரி, எஸ்.செல்வி, கண்டமங்கலம் ஒன்றியத் தலைவா் எஸ்.அண்ணாதுரை, பொருளாளா் ஆா். அழகப்பன் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 140 பெண்கள் உள்பட 330 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவா் என்.வைத்திலிங்கம் தலைமையிலான 146 பெண்கள் உள்பட 259 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.