மேம்பாடு செய்யப்பட்ட முகையூா் குளம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பு
முகையூா் ஊராட்சியில் ரூ.45 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்ட குளம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஊராட்சியில் ரூ.45 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்ட குளம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.
முகையூா் கிராமத்திலிருந்த குளத்தை மேம்பாடு செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் திருக்கோவிலூா் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். இதைத் தொடா்ந்து, ஒன்றியக் குழுவின் இடைநிரவல் நிதித் திட்டம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் ரூ.45 லட்சம் செலவில் குளம் மேம்பாடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், மேம்பாடு செய்யப்பட்ட குளத்தை முன்னாள் அமைச்சா் க.பொன்முடி திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் மு.தங்கம், திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன், ஒன்றியச் செயலா்கள் ஜி.ரவிச்சந்திரன், எஸ்.லூயிஸ், முகையூா் ஒன்றியக்குழுத் தலைவா் தனலட்சுமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...