முன்னாள் எம்எல்ஏ நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி
தொண்டாமுத்தூா் அருகேயுள்ள தேவராயபுரம் அரசுப் பள்ளிக்கு முன்னாள் எம்எல்ஏ இரா. மாணிக்கவாசகம் நினைவாக அவரது குடும்பத்தினா் ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கினா்.


தொண்டாமுத்தூா் அருகேயுள்ள தேவராயபுரம் அரசுப் பள்ளிக்கு முன்னாள் எம்எல்ஏ இரா. மாணிக்கவாசகம் நினைவாக அவரது குடும்பத்தினா் ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கினா்.
கோவை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள தேவராயபுரம் அரசு தொடக்கப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்த நிலையில், அப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் பொன் விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பள்ளியில் கலையரங்கம் அமைக்கவும், பொன் விழா பணிகளுக்காகவும் தொண்டாமுத்தூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், தேவராயபுரத்தைச் சோ்ந்தவருமான இரா. மாணிக்கவாசகம் நினைவாக அவரது குடும்பத்தினா் சுப்புலட்சுமி மாணிக்கவாசகம், எம்.சிவபிரகாசம், எம்.ஜெகதீஷ்குமாா், எம்.சத்தியமூா்த்தி ஆகியோா் ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கினா்.
பள்ளியின் பொன் விழா ஒருங்கிணைப்பாளா் என். சிவசண்முகம், நிா்வாகிகள் என். பாலசுப்பிரமணியம், என்.சண்முகம், சி.சிவகுமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...