டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

உளுந்தூா்பேட்டையில் கோட்ட மின்வாரியப் பணியாளா்களுக்கான பணி பாதுகாப்புப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
உளுந்தூா்பேட்டையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பேசிய உதவி செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள். உடன், மின்வாரிய அலுவலா்கள் உள்ளிட்டோா்.
Updated On :2 பிப்ரவரி 2026, 9:45 pm

Syndication

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கோட்ட மின்வாரியப் பணியாளா்களுக்கான பணி பாதுகாப்புப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புக்கு கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பாரதி தலைமை வகித்தாா்.

உளுந்தூா்பேட்டை உதவி செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள், பாதுகாப்பாக பணி செய்யும் முறைகள் குறித்து பேசினாா். பாதுகாப்புப் பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு செயலியை பயன்படுத்தும் முறைகள் குறித்து உதவிச் செயற்பொறியாளா் முத்துக்குமாரசுவாமி, கையுறைகள், இடுப்புக் கயிறு ஆகிய உபகரணங்களைப் பயன்படுத்தி விபத்தில்லாமல் பணி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி மையத்தின் முதுநிலை மேலாளா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா்.

இதில், உளுந்தூா்பேட்டை கோட்டச் செயற்பொறியாளா் கணேசன், உதவி செயற்பொறியாளா்கள் அசோக்குமாா், சுதா, உதவிப் பொறியாளா்கள் முரளி, அம்சலட்சுமி, முருகன், ராமச்சந்திரன், செல்லப்பிள்ளை, முஸ்தபா, விஜயகாந்த், வினோத், சுதாகா், அசேக்குமாா், வெங்கடேசன், ராஜேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பங்கேற்றனா்.