தனியாா் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வுப் பயிற்சி
திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திடீரென ஏற்படும் தீ விபத்தை தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, தீயணைப்புக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, தீயை விரைவாக கட்டுப்படுத்தும் முறைகள், தீ விபத்துகள் நிகழாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
இதில் திருப்பத்தூரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையப் பணியாளா்கள், தனியாா் தங்கும் விடுதி பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...