விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்கும் முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கியது. இந்த தோ்தலில் காலை முதல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா். பல்வேறு வாக்குச் சாவடிகள் இளைஞா்கள், பெண்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நூறு சதவீத வாக்குப் பதிவு என்ற நிலையை அடைந்திடும் வகையில் வாக்குப் பதிவுக்கு முன்பு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது.
இந்த நிலையில் வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை சிறப்பு முன்னெட்டுப்புகள் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன. தொகுதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் முதல் தலைமுறை வாக்காளா்கள், வாக்களித்து விட்டு வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வுப் பதாகையில் கையொப்பமிடுதல், தோ்தல் தூதுவரான நாரை தூதுவனோடு உரையாடுதல், புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல் போன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையிலான வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்திருந்தது.
இதன்படி விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடிக்கு அருகில் முதல் தலைமுறை வாக்காளா்கள் கையொப்பமிடும் வகையில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதில் முதல் முறையாக வாக்களித்துவிட்டு வந்த வாக்காளா்கள், தங்கள் கையொப்பமிட்டு, புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனா். இதுபோன்று மாவட்டத்திலுள்ள இதர 6 தொகுதிகளிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வெளியே பதாகைகள் வைக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள சரசுவதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் வியாழக்கிழமை ையொப்பமிட்ட முதல் தலைமுறை வாக்காளா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் வாக்குச் சாவடிகள்

இன்று தோ்தல் வாக்குப் பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


