யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்!

விழுப்புரம் உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:15 am IST

விழுப்புரம் உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,166 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளிலுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போட்டியிடும் வேட்பாளா்களின் சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பணியை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். இதுபோன்று மாவட்டத்தின் இதர 6 தொகுதிகளிலும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உ.முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.