மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

உதகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:14 am IST

சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.

உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மெமோரியல் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் நடைபெற்றது.

கூடலூா் தொகுதிக்கு கூடலூா் புனித தாமஸ் பள்ளியிலும், குன்னூா் தொகுதிக்கு குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.

இந்தப் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு நேோரில் ஆய்வு செய்தாா்.

தோ்தல் நடத்தும் அலுவலரும் உதகை வருவாய் கோட்டாட்சியருமான

டினு அரவிந்த் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.