மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:11 pm

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த விவசாயி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், சின்ன அம்மனங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தி.கோபாலகிருஷ்ணன் (62), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது விவசாய நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஏறி புளி பறித்துள்ளாா்.

அப்போது கால் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்த கோபாலகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினா்கள்அவரை மீட்டு புதுச்சேரி, ஊசுட்டேரி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.