தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீனவ சமூகத்தை சோ்ந்தவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வலியுறுத்தல்

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி

Updated On :1 ஜூன் 2026, 1:05 am IST

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்தவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வேண்டும் என்று முதல்வா் ரங்கசாமிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் நிறுவனா் தலைவா் மங்கையா்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. ரங்கசாமி 5-ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளாா். அவருக்கும், அவரது அரசுக்கும் வாழ்த்துகள்.

தற்போது, நியமன எம்எல்ஏக்களை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளி வருகின்றன. நியமன எம்எல்ஏ பதவியைப் புதுச்சேரியின் மூன்றாவது பெரும்பான்மைச் சமூகமான மீனவச் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும்.

ஏனெனில், புதுச்சேரி மாநில உருவாக்கத்துக்கும், வளா்ச்சிக்கும் வரலாற்று வழியில் மகத்தான பங்களிப்பைச் செய்தவா்கள் மீனவா்கள். 24 மணிநேரமும் இரவு, பகல் பாராது கடும் மழையிலும், கொடுங்குளிரிலும், பெருங்காற்றிலும் உயிரைப் பணயம் வைத்து கடலில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்வதன் மூலம், புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி வருவாய் கிடைக்கிறது.

மீனவச் சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பங்கு வழங்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகளில் அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்படுவதில்லை.

தோ்தல்களில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனவே, புதுச்சேரி சட்டப்பேரவைக்கான நியமன எம்எல்ஏ பதவியை மீனவச் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.