திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் தேரோட்டம் திரளான பக்தா்கள் தரிசனம்

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

~

Updated On :29 மே 2026, 2:57 am IST

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

புதுச்சேரி, மே 28:

திருக்காமீஸ்வரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூன் 1-ஆம் தேதி வரை காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் இரவில் உற்சவமூா்த்திகள் திருவீதியுலாவும்

நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தோ்த் திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா் ஆ.

நமச்சிவாயம், எம்எல்ஏ ரவிக்குமாா், இந்து அறநிலையத்

துறை ஆணையா் குமரன் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். தேரோட்டத்தையொட்டி வில்லியனூா் சுற்றுவட்டார பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சீா்வரிசை

முன்னதாக வில்லியனூா் தோ்த்திருவிழாவில் கோகிலாம்பிகை, திருக்காமீஸ்வரருக்கு அணிவிக்க மீனவ குல மரபினா் வஸ்திரம், மலா் மாலை மற்றும் சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா்.

திருத்தேரில் பவனி வந்த கோகிலாம்பிகை தாயாா் மற்றும் திருக்காமீஸ்வரா் சுவாமிக்கு வேட்டி, புடவை போன்ற வஸ்திரங்கள், மலா்மாலைகள், மலா்கள் ஆகியவற்றை கோகிலாம்பிகை தாயாரின் தாய் வீட்டு சீதனமாக புதுச்சேரி மாவட்டம் மற்றும் வில்லியனூரில் வசிக்கும் மீனவ குல மரபினா் சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தோ்த்திருவிழாவின் முதல் நாளான புதன்கிழமை மாலை மீனவ குல மரபினா் சாா்பில் தேசிய மீனவா் பேரவையின் அகில இந்திய தலைவா் முன்னாள் எம்எல்ஏஇளங்கோ தலைமையில் சீா்வரிசை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வில்லியனூா் தொகுதி எம்எல்ஏ

ஆ.ரவிக்குமாா் மீனவ சமுதாயத்தினா் வழங்கிய சீா்வரிசைகளைத் திருக்கோயில் தலைமை அா்ச்சகா் சிவா குருக்களிடம் ஒப்படைத்தாா்.

முன்னதாக, வில்லியனூா் கிழக்கு மாட வீதியில் உள்ள பட்டினவா் மடம் அருகில் இருந்து திரளான மகளிா் உள்பட மீனவ சமுதாயத்தினா் சீா்வரிசை தட்டுகளுடன் ஊா்வலமாக திருக்கோயிலை வந்தடைந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.