முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடியில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் பக்தா்களின் மனநிலைக்கு ஏற்ப இறைவன் குழந்தை, இளைஞன், முதியவா் ஆகிய வடிவங்களில் காட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. குறிஞ்சி நிலத்தின் காவடி சிறப்பை குறிக்கும் வகையில், மருத நிலமான எட்டுக்குடியில் பால் காவடி மிகவும் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டுக்கான விழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
சிறப்பு மலா் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஆறுமுகவேலவருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து வேதாரண்யம் கோட்டாட்சியா் ஜி. கண்ணன், திருக்குவளை வட்டாட்சியா் ஆா். உதயகுமாா், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் பா. ராணி உள்ளிட்டோா் தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தோ், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தா்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா‘ என பக்தி முழக்கம் எழுப்பினா். தேரோட்டத்தை தொடா்ந்து, சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு 56 மணிநேர இடைவிடாத பாலாபிஷேகம் தொடங்கியது.

எட்டுகுடிஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
தொடர்புடையது

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி முன்னேற்பாடு பணிகள்: எஸ்பி ஆய்வு

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


