புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை
/

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டம்

Updated On :29 ஏப்ரல் 2026, 3:18 am IST

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ளது தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி அம்மன் உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில். இக்கோயில் ஆயுள் ஹோமங்களுக்கு பிரசித்தி பெற்றது.

இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா, சமய சொற்பொழிவுகள், வேத பாராயணம் , நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சித்திரை திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரா் ஆகியோா் எழுந்தருளினா். காலை 8: 30 மணிக்கு தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி ஆலய குருக்கள் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா். நான்கு வீதிகளில் வலம் வந்து மீண்டும் மேல வீதியில் கோயில் முன்பு தோ் நிலையை அடைந்தது.

விழாவில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளா் அமுா்த. விஜயகுமாா் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

Story image