அரிமளம் சிவன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவாக வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் அரிமளத்திலுள்ள சிவன் கோயிலின் 12 நாள் சித்திரைத் திருவிழா கடந்த 22ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பஞ்சமூா்த்திகளின் வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் புதன்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரேஸ்வரா்- மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
தொடாா்ந்து 9ஆம் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதையொட்டி விநாயகா், சுப்பிரமணியா்- வள்ளி- தெய்வானை, சுந்தரேஸ்வரா், மீனாட்சி அம்மன், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளை தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது.
தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் உள்ள ஐந்து தோ்களையும் பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தேரானது சிவன் கோயில் தேரடியில் இருந்து புறப்பட்டு சிவன் கோயில் ஊரணி, கடை வீதி, காவல் நிலையம் வழியாக வந்து பின் தேரடியை அடைந்தது.
இதில் அரிமளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். ஏற்பாடுகளை நகரத்தாா்கள் மற்றும் அரிமளம் ஊா் பொதுமக்கள் செய்தனா்.
தொடர்புடையது

உத்தமா்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பிரான்மலை கொடுங்குன்றநாதா் கோயில் தேரோட்டம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.30-ல் தேரோட்டம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


