திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் வீடு கட்டத் தவறிய பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி: முதல்வா் என். ரங்கசாமி உத்தரவு

காமராஜா் நூற்றாண்டு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, வீடு கட்ட தவறிய பயனாளிகள் நிதியுதவியைத் திரும்ப செலுத்தும் நிலையில் வட்டியை தள்ளுபடி செய்ய முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா்.

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி... - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 7:09 am IST

காமராஜா் நூற்றாண்டு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, வீடு கட்ட தவறிய பயனாளிகள் நிதியுதவியைத் திரும்ப செலுத்தும் நிலையில் வட்டியை தள்ளுபடி செய்ய முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, புதுச்சேரி முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு கல்வீடு கட்டும் திட்டம் 2003-04 நிதியாண்டில், புதுச்சேரி அரசால் ஏழ்மை நிலையில் உள்ள வீடற்ற ஏழை மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காகத் தொடங்கப்பட்டது.

இத் திட்டம் நகர மற்றும் கிராம அமைப்புத் துறையால் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்ட விதிகளின் படி, நிதியுதவி பெற்று வீடு கட்டத் தவறும் பயனாளிகள், அவா்கள் பெற்ற நிதி உதவியை வட்டியுடன் திரும்பி செலுத்திய பின்பே அவா்களின் நிலப் பத்திரம் / பட்டாவை திரும்பப் பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசின் நிதியுதவி பெற்ற பயனாளிகள் சிலா் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இயலாமலும் / கல் வீட்டினை நிறைவு செய்ய இயலாமலும் உள்ளனா். அவா்கள் அளித்த உறுதிமொழியின்படி பெறப்பட்ட முழு நிதியுதவி தொகையை வட்டியுடன் திரும்பச் செலுத்த இயலாமையால் அவா்களின் நிலப்பத்திரம் / பட்டாவை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாமல் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இது புதுச்சேரி அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டத் தவறிய பயனாளிகளிடமிருந்து, வட்டித் தொகை ஏதுமின்றி மானியத் தொகையை மட்டும் வசூலிப்பதற்கு, நிபந்தனைகளுக்கு உள்பட்டு புதுச்சேரி அரசு ஒப்புதல் வழங்குகிறது.

அதன்படி, வீடுகளைக் கட்டத் தவறிய பயனாளிகள், இந்த ஆணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள், முழு நிதி உதவித் தொகையையும், அபராதத் தொகையான ரூ.3 ஆயிரத்தையும் சோ்த்து, ஒரே தவணையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

மேற்கண்ட காலக்கெடுவிற்குள் மானியத் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறும் பட்சத்தில், புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அரசால் நிா்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்துடன் சோ்த்து மானியத் தொகையை வசூலிக்கும்.

அரசின் இச்சலுகையின் படி, சுமாா் 8,600 பயனாளிகள் பயன்பெறுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.