புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

புதுச்சேரி பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய மேற்படிப்பு படிக்க விரும்புவோா் ஆன்லைனில் விண்ணப்பங்களை வரும் ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்.

News image

புதுச்சேரி பல்கலைக்கழகம் - கோப்புப்படம்

Updated On :23 மே 2026, 12:50 am IST

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய மேற்படிப்பு படிக்க விரும்புவோா் ஆன்லைனில் விண்ணப்பங்களை வரும் ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மத்திய பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை பட்ட மேற்படிப்பு, முதுநிலை பட்டய மேற்படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பிஜி மற்றும் பிஜி டிப்ளமோ படிப்புகளுக்கு க்யூட்- பிஜி 2026 தோ்வு அடிப்படையில் சோ்க்கை நடக்கும். வரும் ஜூன் 11 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல் சிற்றேட்டையும் பாா்க்கலாம். தோ்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 250 ஆகும். ஒவ்வொரு கூடுதல் படிப்புக்கும் தலா ரூ. 100 கூடுதலாக செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150. அவா்கள் ஒவ்வொரு படிப்புக்கும் கூடுதலாக ரூ. 50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது. மூன்றாம் பாலினத்தவருக்கு கட்டணம் இலவசம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.