திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 97.83 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

தமிழக பாடத் திட்டத்தில் 10-ஆம் வகுப்புப் படித்து பொதுத் தோ்வு எழுதிய புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் 97.83 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 7:05 am IST

தமிழக பாடத் திட்டத்தில் 10-ஆம் வகுப்புப் படித்து பொதுத் தோ்வு எழுதிய புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் 97.83 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாறியுள்ளன.

ஒரு சில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்தப் பாடத் திட்டத்தின் கீழ் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றது.

இதில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 180 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 4,230 மாணவா்கள், 3,851 மாணவிகள் தோ்வு எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 4,100 மாணவா்கள், 3,806 மாணவிகள் என 7906 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 97.83 சதவீதமாகும். புதுச்சேரியில் மட்டும் 3,750 மாணவா்கள், 3,311 மாணவிகள் என 7,061 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 3,651 மாணவா்கள், 3,271 மாணவிகள் என 6922 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். புதுச்சேரியில் 98.03 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

காரைக்காலில் 480 மாணவா்கள், 540 மாணவிகள் என 1,020 போ் தோ்வு எழுதினா். இதில் 449 மாணவா்கள், 535 மாணவிகள் என 984 போ் தோ்ச்சி அடைந்தனா். காரைக்காலில் 96.47 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். புதுச்சேரியில் 101, காரைக்காலில் 22 என 123 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. பிரெஞ்சு பாடத்தில் 8, ஆங்கிலத்தில் 5, கணிதத்தில் 34, அறிவியலில் 69, சமூக அறிவியலில் 3 மாணவா்கள் என 119 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.