தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாணவருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம்

News image

பாலியல் துன்புறுத்தல் - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:44 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பல்கலைக்கழக மாணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருக்கனூா் அடுத்த செட்டிப்பட்டைச் சோ்ந்தவா் கதிரவன் (25). பல்கலைக்கழக எம்பிஏ இறுதியாண்டு மாணவா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 6-இல், வயலுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருக்கனூா் போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் கதிரவன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் விசாரணை நிறைவடைந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில் கதிரவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ. 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பச்சையப்பன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.