புதுச்சேரி ஜிப்மரின் செவிலியா் மற்றும் துணை மருத்துவ அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான 12-ஆவது பட்டமளிப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜிப்மா் வளாகத்தில் அமைந்துள்ள டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கத்தில் நடைபெறுகிறது.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலா் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா முதன்மை விருந்தினராகவும், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனா்.
ஜிப்மரின் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி நிறுவன அறிக்கையைச் சமா்ப்பிக்க உள்ளாா். இந்தப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 320 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகிறது என ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










