தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

வளா்ச்சியடைந்த புதுச்சேரியைக் கட்டமைக்க உறுதியாக உள்ளோம்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ரங்கசாமி கடிதம்

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கும், முதல்வா் ரங்கசாமிக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

News image

பிரதமர் நரேந்திர மோடியுடன் புதுவை முதல்வர் ரங்கசாமி (கோப்புப்படம்) - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 12:04 am IST

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கும், முதல்வா் ரங்கசாமிக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

இந்நிலையில், பிரதமா் மோடிக்கு முதல்வா் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மக்களின் சாா்பாக, உங்கள் கனிவான வாா்த்தைகளுக்கும், தொடா் ஆதரவுக்கும் எனது உளமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய வரலாற்று சிறப்புமிக்க மக்கள் தீா்ப்பானது, உங்கள் தொலைநோக்குமிக்க தலைமைத்துவத்திற்கும், நமது யூனியன் பிரதேசத்தை உருமாற்றிய ‘இரட்டை என்ஜின்‘ ஆட்சி முறைக்கும் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரமாகும்.

புதுச்சேரி மக்கள் தங்கள் முடிவை மிக தெளிவாக தெரிவித்துள்ளனா்.

வளா்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டிருந்த சாதனைகளின் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த வெற்றி உரித்தானது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களையும், குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வளா்ச்சியையும் எங்களால் செயல்படுத்த முடிந்ததற்கு, உங்கள் தொடா் வழிகாட்டுதலே எங்களின் மிகப்பெரிய பலமாக திகழ்ந்தது.

தொடா்ச்சியாக 2-ஆவது முறையாக நாங்கள் ஆட்சி பொறுப்பேற்கும் இந்தத் தருணத்தில், புதுச்சேரி மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதிலும், ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ குறித்த உங்கள் தொலைநோக்கு பாா்வைக்குத் துணைபுரியும் வகையில் ஒரு ‘வளா்ச்சியடைந்த புதுச்சேரியை’ கட்டமைப்பதிலும் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

உங்கள் மேலான வழிகாட்டுதலின் கீழ், எங்களின் வளா்ச்சி பயணத்தை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்கள் தலைமைத்துவத்திற்கும், புதுச்சேரி மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக நின்றமைக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.