லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மீனவா்களின் வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.12.38 கோடி நிதி! - முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

News image

புதுச்சேரி மீன்வளத் துறை சாா்பில் மீனவா்களுக்கு உதவித் தொகைக்கான காசோலையை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.

Updated On :14 மார்ச் 2026, 9:09 pm

மீனவா்களின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச் சத்துத் திட்டத்துக்கு உதவி அளிக்கும் வகையில் ரூ.12.38 கோடியை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தாா்.

இதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 27,514 மீனவா்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கும். இந்நிகழ்ச்சிக்கு, மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ், மீன்வளத் துறை இயக்குநா் அ. முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத் துறை துணை இயக்குநா் ஷாஜிமா மற்றும் ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் மீனவக் கிராம பஞ்சாயத்தாா் கலந்து கொண்டனா்.