மீனவா்களுக்கு ரூ.17 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா். புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் சாா்பில் இந்த உதவி வழங்கப்பட்டது. பல்வேறு மீனவ கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
47 விசைப்படகு உரிமையாளா்களுக்கு மீன்பிடி உபகரணங்களாக இரும்பு கயிறு உள்ளிட்ட பொருள்கள் வாங்க 60% மானிய விலையில் ரூ.6.23 கோடி வழங்கப்பட்டது. 45 பேருக்கு பாரம்பரிய மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு 50% மானிய விலையில் ரூ.33.75 லட்சம் மற்றும் கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் வலை வாங்குவதற்கு ரூ.1.75 லட்சம் வழங்கப்பட்டது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வாங்க 4,100 மீன்பிடி படகு உரிமையாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி ரூ.4.43 கோடி மற்றும் மாநில அரசு நிதியுதவி ரூ.5.62 கோடி வழங்கப்பட்டது. இதைத் தவிர 104 பேருக்கு பாரம்பரிய மீன் பிடி படகுக்கு வெளிப்புற இயந்திரம் வாங்க 41 லட்சம் வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் , பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி எம்எல்ஏ, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா்அ.முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

மீனவா்களின் வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.12.38 கோடி நிதி! - முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

தென்காசியில் 7,127 பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


